மனிதன், பூமி, மற்றும் இந்தப் பிரபஞ்சத்தின் ஏனையவை யாவும் ஒன்றுமில்லாததில் இருந்து சந்தர்ப்பவசத்தினால் தற்செயலாக வெடித்துத் தோன்றியது என்பதற்குப் பதிலாக, ஆதியிலே சிருஷ்டிக்கப்பட்டது எனும் தத்துவமே சிருஷ்டிப்பின் கொள்கையாகும்.
மிக நேர்த்தியான, கைத்திறன் வேலையான, சுயாட்சியான, சுயமாக திட்டமிடப்பட்ட, விண்வெளி வாகனத்தின் ஒரு சிறிய பரப்பில் நாம் குடியிருக்கிறோம். எஞ்சியிருந்து, ஜெயம் மற்றும் மரணத்துடனும் இணைந்து அழகு, நறுமணம், அன்பு மற்றும் இசை என்பவற்றிக்கு நாம் சாட்சியாக இருக்கிறோம். இதை சிந்தித்துப் பாருங்கள். கணிதங்கள், தத்துவ சாஸ்திரம், வசந்த காலம், சீரழிவு, திருமணத்திற்கு முன்பான உறவு, பெரிய நட்சத்திரங்கள், மற்றும் பபிள்க்கம்; இவை யாவும் ஒன்றுமில்லாததில் இருந்து வந்தது?, சந்தர்ப்பவசத்தினால் உண்டானது...?
எல்லாச் சந்ததியும் இதுவரையில் பூமி்யில் குடியிருக்கையில், எம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் இயங்க வைத்த விஞ்ஞான ரீதியான கணக்கியலாளரின் அமைதியான பிரசன்னத்தை விளங்கிக் கொள்ளாததற்கு மிகவும் சொற்பமான சாட்டுப்போக்குகளே எமக்குண்டு. நாம் நம்பிக்கையற்றவர்களாகவும் இறுமாப்புள்ளவர்களாகவும் இராமல், பணிவுடன் கூடிய பயத்துடன் இருக்க வேண்டும்.
கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முன்னதாக இஸ்ரவேலின் இராஜாவாகிய தாவீது: "உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்" (சங்கீதம் 8:3-4) என எழுதினார்.